இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், சீன அதிபர் ஷி ஜின்பிங் தமிழ்நாட்டிற்கு வருவதைக் கண்டிப்பதாகவும், தமிழ்நாட்டில் சீனப் பொருட்கள் ஆதிக்கம் செலுத்துவதால் பட்டாசு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சீனாவிடம் இருக்கும் கைலாயத்தை மீட்கவும், இலங்கை தமிழர் பாதுகாப்பு குறித்தும், பட்டாசு உள்ளிட்ட சிறு வணிகர்களின் தொழில் பாதுகாப்பு குறித்தும் பிரதமர் மோடி சீன அதிபரிடம் வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெறும் சந்திப்பில் பிரதமர் மோடியிடமும், தமிழ்நாடு முதலமைச்சரிடமும் நேரில் வலியுறுத்த உள்ளதாக தெரிவித்த அவர் திபெத் மக்களை சீன அதிபர் கொத்தடிமைகளாக நடத்துவதாகவும், அவர்களின் சுதந்திரத்தித்திற்காக குரல் கொடுக்க முயன்ற மாணவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளது கண்டிக்க தக்கதாகவும்; உடனடியாக அவர்களை தமிழ்நாடு அரசு விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் திபெத்தியர்களை கண்காணிக்க உத்தரவு!