தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் போத்தீஸ் உள்பட 3 ஜவுளிக் கடைகளுக்குச் சீல்!

சேலம்: கரோனா விதிமுறைகளை மீறியதாக போத்தீஸ் உள்பட மூன்று ஜவுளிக் கடைகளுக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல்வைத்தனர்.

சேலம் போத்தீஸ்  சேலம் போத்தீஸ் சீல்  சேலத்தில் போத்தீஸ் உள்பட 3 ஜவுளிகடைகளுக்கு சீல்  Three Textile Shops Sealed In Salem  Salem Pothys  Pothys Sealed  Textile Shops Sealed  Salem Corporation
Three Textile Shops Sealed In Salem

By

Published : May 2, 2021, 9:24 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அரசுத் தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சேலத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவோர் மீது மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், சேலம் நான்கு ரோடு பகுதியில் உள்ள போத்தீஸ், குமரப்பா சில்க்ஸ், சிவா டெக்ஸ்டைல்ஸ் ஆகிய 3 ஜவுளிக்கடைகள் பின்வாசல் வழியாகச் செயல்பட்டுவருவதாக மாநகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சூரமங்கலம் மண்டல மாநகராட்சி அலுவலர்கள் சம்மந்தப்பட்ட கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தினர்.

சீல் வைக்கப்பட்ட போத்தீஸ் ஜவுளிக்கடை

அப்போது, மூன்று கடைகளிலும் திரளான பொதுமக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அலுவலர்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியே அனுப்பினர்.

இதைத்தொடர்ந்து அரசு உத்தரவை மீறி பின்வாசல் வழியாகச் செயல்பட்ட கடை நிர்வாகிகளை அலுவலர்கள் கடுமையாக எச்சரித்ததோடு மூன்று கடைகளுக்கும் சேர்த்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். பின்னர் கடையைப் பூட்டி சீல்வைத்தனர்.

இதையும் படிங்க:ஏமன் நாட்டிற்குச் சென்ற இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details