தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்த கும்பல் கைது! - சேலம் மாவட்ட செய்திகள்

சேலம்: தாதகாபட்டி அருகே இயங்கிவந்த அழகு நிலையத்தில் இளம் பெண்களை மிரட்டி ஆபாசமாக படம் எடுத்த கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.

பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்த கும்பல் கைது
பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்த கும்பல் கைது

By

Published : May 29, 2020, 3:22 PM IST

சேலம் மாவட்டம் தாதகாபட்டியில் உள்ள சீரங்கன் தெருவில் வசித்து வருபவர்கள் லோகநாதன் - ரூபா தம்பதி. இவர்கள் வீட்டிலேயே அழகு நிலையம் நடத்திவந்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள், அழகு நிலையத்தில் வேலை கேட்டுச் சென்றுள்ளனர். அவர்களை வேலைக்கு சேர்த்துக்கொண்ட லோகநாதன், அவரது மனைவி இருவரும், அந்த மூன்று இளம் பெண்களிடமும் பணம் சம்பாதிக்க ஆசைவார்த்தைக் கூறி அவர்களை பாலியல் தொழில் செய்ய வற்புறுத்தியுள்ளனர்.

இதற்கு அந்த மூன்று பெண்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர். பின்பு, கடந்த இரு தினங்களுக்கு முன்பு வேலைக்கு வந்த மூன்று பெண்களையும் வீட்டிற்குள் அடைத்துவைத்து தம்பதி இருவர், மேலும் சிலர் இணைந்து கத்தியை காட்டி மிரட்டி, பெண்கள் மூவரையும் ஆபாசமாக படம் எடுத்துள்ளனர். இதையடுத்து, அந்த மூன்று பெண்களும் இது குறித்து சேலம் நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றஞ்சாட்டப்பட்ட லோகநாதன், அவரது நண்பர்கள் பிரதிப், சிவா ஆகிய மூவரையும் கைதுசெய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்த செல்ஃபோன்களை ஆய்வு செய்த காவல் துறையினர், அதில் பல இளம்பெண்களின் ஆபாச படங்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். மேலும், லோகநாதன் கைது செய்யப்பட்டதை அறிந்த கணவரால் கைவிடப்பட்ட இளம்பெண் உள்ளிட்ட இரண்டு பெண்கள், லோகநாதன்-ரூபா தம்பதி தங்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி வருவதாகவும், பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தி வருவதாகவும் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, அந்த புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில், லோகநாதன் - ரூபா தம்பதி, ஆண்டுக்கு ஒரு முறை, தாங்கள் வசிக்கும் பகுதியை மாற்றிக்கொண்டே இருந்ததாகவும், இதுபோன்று அழகு நிலையம் நடத்திவருவதாக கூறி அங்கு வேலைக்கு வரும் இளம்பெண்களை ஆபாச படங்கள் எடுத்து அவர்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சிசெய்தது தெரியவந்தது.

பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்த மூன்று பேர்

மேலும், இவர்களின் பட்டியலில் சில தொழிலதிபர்களும் சிக்கியுள்ளனர். அவர்களின் புகைப்படங்களும் அவர்களது செல்ஃபோனில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட லோகநாதன், அவரது நண்பர்கள் சிவா, பிரதிப் ஆகியோர் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய லோகநாதனின் மனைவி ரூபா, இதற்கு உடந்தையாக இருந்த லோகநாதனின் தந்தை ரகுராம் உள்ளிட்ட சிலரை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: பெண்களை ஏமாற்றிய காசி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details