சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த தம்மம்பட்டி அருகே உள்ள கீரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனது மனைவி வரலட்சுமி, அவரது உறவினர் சாந்தி ஆகிய மூன்று பேரும், தங்களது இல்லத்திருமண நிகழ்ச்சிக்காக தம்மம்பட்டியில் இருந்து நகை வாங்கிக்கொண்டு கீரிப்பட்டி நோக்கி, காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சேலத்திலிருந்து தம்மம்பட்டி வழியாக திருச்சி சென்ற சொகுசு கார், கீழ் கணவாய் என்ற இடத்தில், சிவகுமார் ஓட்டி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கீரிப்பட்டியைச் சேர்ந்த சிவகுமார், அவருடைய மனைவி வரலட்சுமி அவருடைய உறவினர் சாந்தி ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.