தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குட்கா விற்பனை செய்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

சேலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்த இரண்டு கடை உரிமையாளர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குட்கா விற்பனை செய்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
குட்கா விற்பனை செய்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

By

Published : Jul 25, 2021, 7:53 AM IST

சேலம்:தமிழ்நாட்டில்தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் தங்கு தடையின்றி புழக்கத்தில் இருந்து வருகிறது.

இதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வரும் நபர்கள், விற்பனையாளர்களை கைது செய்துவருகிறது.

இந்நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் தலைமையிலான அலுவலர்கள் நேற்று (ஜூலை 25) திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

அப்போது, இரண்டு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள், இரண்டு கடைகளின் உரிமையாளர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதையும் படிங்க: ஆந்திரா டூ கோயம்புத்தூர் கஞ்சா கடத்தல்- இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details