சேலம் : சேலம் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (மார்ச் 28) தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இதில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
இது போன்ற குற்றங்களை தடுப்பதற்கு சிறப்பு புலனாய்வு குழு அல்லது உளவுத்துறை அமைக்கப்பட வேண்டும். சாதி, மத மோதல்களை தடுத்திடும் வகையிலும் சிறப்பு சைபர் கிரைம் உளவுத்துறை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இதையடுத்து, “தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் பேசாமல் அவதூறு பேசி வருகிறார், தன்னுடைய பெயரை விளம்பரப்படுத்தி அனைத்து தொலைக்காட்சிகளும் அவரைப் பற்றி பேச வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் பேசி வருகிறார்” என்றார்.
நீட் எதிர்ப்பு மசோதா.. அடித்து ஆடும் திருமாவளவன்! மேலும், “அவதூறு பேசி வரும் அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்” என்றார். இதைத் தொடர்ந்து நீட் எதிர்ப்பு மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்றார்.
இது குறித்து அவர், “நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானம் தற்போது ஆளுநரிடம் உள்ளது. அந்த தீர்மானத்தை விரைந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். குடியரசுத் தலைவர் அதனை கிடப்பில் போடாமல் அதற்கு ஒப்புதல் வழங்கி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : அம்பேத்கர் பிறந்த நாளில் தேசிய விடுமுறை- திருமாவளவன் எம்.பி., கோரிக்கை!