சேலம்:மேட்டூரில் தலா 210 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் நான்கு அலகுகள் கொண்ட அனல் மின் நிலையமும், 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மற்றொரு அனல் மின் நிலையமும் செயல்பட்டு வருகின்றன. இந்த மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் நாள்தோறும் ஆயிரத்து 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இதற்கென நாளொன்றுக்கு 26 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்பட்ட நிலையில், மத்திய நிலக்கரி தொகுப்பில் இருந்து சுமார் 12 ஆயிரம் டன் அளவுக்கு மட்டுமே ரயில்கள் மூலம் நிலக்கரி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கோடைக்காலத்தில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. ஆனால், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மூன்று அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்: தற்போது மேட்டூர் அனல் மின் நிலையத்தில் சுமார் 7 ஆயிரம் டன் அளவுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பில் உள்ளது. இதனால், 840 மெகாவாட் அனல் மின் நிலையத்திலுள்ள 2,3,4ஆகிய மூன்று அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.