சேலம்:நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் நேற்று (ஜன.6) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
தேனி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.பி ராமர் மற்றும் பெரியகுளம் ஒன்றிய பொறுப்பாளர் அன்னபிரகாஷ் ஆகியோர் ஏற்பாட்டில், திமுகவைச் சேர்ந்த தாமரைக்குளம் பேரூர் இளைஞரணி துணைச் செயலாளர் அப்பாஸ் மைதீன் தலைமையில், மாவட்ட திமுக வர்த்தக அணி துணைச் செயலாளர் செல்லராமன், முன்னாள் தென்கரை பேரூர் செயலாளர் கருத்தப்பாண்டி, பேரூர் இளைஞர் அணி செயலாளர் சதீஷ்குமார், மகளிர் அணி செயலாளர் விஜயா, பெரியகுளம் நகர இளைஞரணி நிர்வாகி ரபிக் ராஜா,
பெரியகுளம் தெற்கு ஒன்றிய பிரதிநிதி அந்தோணி, பெரியகுளம் நகர வர்த்தக அணியைச் சேர்ந்த சம்சுதீன், பெரியகுளம் ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் முகமது சபீக் உள்பட திமுக நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்கள் என மொத்தம் 250 பேர், நேற்று (ஜன.6) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அப்போது இஸ்லாமிய மக்களின் புனித நூலான திருக்குர் ஆன் புத்தகத்தை இஸ்லாமிய மக்களுக்கு பரிசாக வழங்கினர். அதைத் தொடர்ந்து, இஸ்லாமிய மக்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அதேபோல், கேரள மாநிலத்தில் ஓ.பன்னீர்செல்வத்தால் நியமிக்கப்பட்ட கேரள மாநில பொருளாளர் ஜெயலால் தலைமையில், கேரள மாநில அவைத் தலைவர் ஜிஜ்ஜோ வெம்பிலான், மாநில இணைச் செயலாளர் மல்லிகா,