சேலம் மாவட்டம் திருமலைகிரி, சிவதாபுரம் உள்ளிட்ட நான்கு இடங்களில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்கள் கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று அன்னதானப்பட்டி, மணியனூர் உள்ளிட்ட ஐந்து இடங்களிலும் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். தொடர் கொள்ளையால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.