தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயிலில் குத்துவிளக்கு திருட்டு - பொதுமக்களிடம் சிக்கிய திருடன்! - பொதுமக்கள் தர்ம அடியில் சிக்கிய திருடன்

சேலம்: கோயில் குத்துவிளக்கு திருடிய திருடனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

thief
theif

By

Published : Dec 19, 2019, 4:29 PM IST

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிரட்ஸ் சாலையில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் விநாயகர் கோயிலில் நோட்டம்விட்டவாறு அடையாளம் தெரியாத நபர் சுற்றித்திரிந்துகொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் விநாயகர் கோயிலில் நுழைந்து யாரும் இல்லாத நேரத்தில், குத்துவிளக்கினை சுருட்டிக்கொண்டு நடையைகட்டினார்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை துரத்திசென்று பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் டவுன் காவல் நிலைய காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

குத்துவிளக்கு திருடியவரை தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

இதையடுத்து நடந்த விசாரணையில், அவர் அம்மாபேட்டையை பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் என்பதும், சமையல் உதவியாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. மேலும் இவர் பல்வேறு வீடுகள் மற்றும் கோயில்களில் பகல் நேரங்களில் நோட்டமிட்டு திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: வழிப்பறி செய்ததாக காவல் நிலையத்தில் புகார்! நூதன முறையில் திருட்டு!

ABOUT THE AUTHOR

...view details