சேலம் எருமைபாளையம் பைபாஸ் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் பூஜை முடித்து பூசாரி கோயிலை நேற்று முன்தினம் மாலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர், நேற்று காலை வந்து பார்க்கையில் கதவு திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து பூசாரி கோயிலுக்குள் சென்று பார்த்தபோது மாரியம்மன் கழுத்தில் இருந்த தாலிக்கொடி காணாமல் போனது தெரிய வந்தது.
இதையடுத்து கிச்சிப்பாளையம் காவல் துறையினருக்கு அவர் தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.