சேலம் அங்கம்மாள் காலனி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் வீரபாண்டியார் நகர்ப்பகுதியில் செல்போன் விற்பனை மற்றும் செல்போன் பழுது பார்க்கும் கடையை கடந்த 15 வருடங்களாக நடத்திவருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். வழக்கம்போல் இன்று காலை நாகராஜ் கடையை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு செல்போன்கள் திருடப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதேபோல், அவரின் கடை அருகே இருக்கும் மற்றொரு செல்போன் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு செல்போன்கள், மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளன. இதனையடுத்து கடை உரிமையாளர்கள் பள்ளப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பள்ளப்பட்டி காவலர்கள் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், இரவு நேரத்தில் செல்போன் கடைகளில் கொள்ளை நடந்துள்ளது அப்பகுதியைச் சேர்ந்த வணிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவரை மடக்கி பிடித்த பொதுமக்கள்!