திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நித்தியா(34). சேலம் மாவட்டம், தேவனூர் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள இவருக்கு வாக்குசாவடி குறித்த பயிற்சி சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று வருகிறது.
தேர்தல் பயிற்சியில் ஈடுபட்ட ஆசிரியை மாரடைப்பால் திடீர் மரணம்! - selam
சேலம்: வாக்குச்சாவடியில் பணியாற்றுவது குறித்த பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆசிரியை மாரடைப்பால் இறந்திருப்பது சக ஆசிரியர்களை சோகத்தில் ஆழ்தியுள்ளது.

ஆசிரியை மரணம்
வாக்குச்சாவடி பயிற்சியில் ஈடுபட்ட ஆசிரியை மரணம்
இதில் அவர் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற போது, திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். இதையடுத்து, சக ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நித்தியா வரும் வழியிலேயே மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது சக ஆசிரியர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியது. தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.