தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.2 குறைப்பு...! குஷியான வாடிக்கையாளர்கள்! பொறுங்க சூட்சமம் இருக்கு! - salem news

aavin milk price reduction: சேலத்தில் ஆவின் நிறுவனம் சார்பில் 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சிறிய பால் பாக்கெட் விலை 2 ரூபாய் குறைக்கப்பட்டு இன்று முதல் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 12:44 PM IST

சேலம்: அரசு சார்பில் ஆவின் நிறுவனம் வாயிலாக 225க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் தயாராகும் மோர், ஐஸ்கிரீம், நெய், இனிப்பு வகைகள் ஆகியவற்றை அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். ஆவின் பால் பாக்கெட் ஆரஞ்சு, பச்சை, நீலம் உள்ளிட்ட நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட் ஒரு லிட்டர் 60 ரூபாய்க்கும், பச்சை நிற பால் பாக்கெட் ஒரு லிட்டர் 44 ரூபாய்க்கும், அதே போல 250 மில்லி கொண்ட பச்சை நிற பால் பாக்கெட் 12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சேலம் ஆவின் நிர்வாகம் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.

ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "250 மில்லி லிட்டர் கொண்ட பால் பாக்கெட் 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனை 200 மில்லி அளவாக குறைத்து பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். அந்தத் திட்டமானது இன்று (செப். 21) முதல் சேலம் மாவட்டம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் புதிய 200 மில்லி பால் பாக்கெட் இன்னும் அச்சிடப்படாததால் ஏற்கனவே 250 மில்லி லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட் இன்று முதல் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பச்சை நிற பால் பாக்கெட்டின் விலை இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற அனைத்து பால் பாக்கெட்களும் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் ஆவின் வெண்ணெய் மற்றும் நெய் விலை உயர்த்தப்பட்டது. விலை உயர்வுக்கான விளக்கம் அளித்த ஆவின் நிர்வாகம் "ஆவின் பொருட்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ஆவின் தேவை அதிகரித்துள்ளது. தற்போது இந்திய அளவில் பால் மூலப்பொருட்களின் கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும் உற்பத்தி செலவும் அதிகரித்த காரணத்தால் ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் பொருட்கள் விலையேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது

இதையும் படிங்க:அழிவின் விளிம்பில் பறவை இனங்கள் - பறவையியல் ஆராய்ச்சியாளர்கள் கொடுக்கும் எச்சரிக்கை என்ன?

ABOUT THE AUTHOR

...view details