சேலம் பெரமணூர் ஶ்ரீ மாரியம்மன் கோயில் நடையை ஞாயிற்றுக்கிழமை இரவு பூசாரி சாத்திவிட்டு சென்றார்.
இந்நிலையில் கோயிலின் பூட்டை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் உடைக்கும் சத்தம் கேட்டது. இந்தச் சத்தம் கேட்டு மக்கள் அங்கு வந்தனர். அப்போது கோயில் பூட்டை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் உடைப்பது தெரியவந்தது.
அதைப் பார்த்த மக்கள் சத்தமாக கூச்சலிட்டனர். இதைக் கேட்ட உஷாரான அவர்கள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர்.
இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முன்னதாக கடந்த 10 தினங்களுக்கு முன்பு, எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உண்டியலை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தை திருடிச் சென்றனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.