தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாடர்ன் தியேட்டர்ஸ் இடத்தில் கருணாநிதி சிலை?.. சிக்கலை சந்தித்து வரும் மாடர்ன் தியேட்டர்ஸ் குடும்பம்..! பின்னணி என்ன? - modern theatres issue

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் இடத்தில் கருணாநிதி சிலையை வைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது மாடர்ன் தியேட்டர்ஸ் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக கூறி அந்த பகுதியில் அளவீடு செய்து கல்நட்டு சென்றுள்ளனர்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 6:38 PM IST

சேலம்: சேலம் இருந்து ஏற்காடு செல்லும் சாலையில் மாடர்ன் தியேட்டர்ஸ் உள்ளது. 1935ஆம் ஆண்டு டி.ஆர். சுந்தரம் மூலம் தொடங்கபட்ட இந்த நிறுவனம் தான் முதல் முதலாக தென்னிந்தியாவில் உருவாக்கப்பட்ட பெரிய திரையரங்கம் ஆகும். இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் சினிமா நிறுவனம் தமிழ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 150க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளது.

முதல் முறையாக கலர் படத்தை தயாரித்த பெருமையும் மாடர்ன் தியேட்டர்ஸையே சாரும். முன்னாள் முதல்வர் கருணாநிதி, எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருக்கு திருப்புமுனையாக இருந்த இடம் தான் மாடர்ன் தியேட்டர்ஸ் என்றால் அது மிகையாகாது. தற்போது சேலம் - ஏற்காடு மலை அடிவாரத்தில் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோவின் நினைவு ஆர்ச் மட்டும் உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சேலம் வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு நின்று செல்பி எடுத்துக்கொண்டது மட்டுமல்லாமல் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உடனான நினைவுகளை பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் தான் இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவு ஆர்ச் அமைந்துள்ள இடத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலையை வைக்க முதலமைச்சர் ஸ்டாலின் மாடர்ன் தியேட்டர்ஸின் குடும்பத்தை அழைத்து பேசியதாக கூறப்படுகிறது.

மேலும், அம்மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் இதுவரையில் ஐந்து முறை மாடர்ன் தியேட்டர்ஸ் குடும்பத்தை அழைத்து கலைஞர் சிலை வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மாடர்ன் தியேட்டர்ஸ் குடும்பத்தினர் எவ்வித முடிவையும் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மாடர்ன் தியேட்டர்ஸ் தேசிய நெடுஞ்சாலை இடத்தில் உள்ளதாகவும், இது நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது என்று கூறி அந்த பகுதியில் அளவீடு செய்து முட்டுக்கல்நட்டு சென்றுள்ளனர். அப்பகுதியில் ஒரு அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர்.

அதற்கு ஒரு படி மேலாக மாடர்ன் ஸ்டேட்டஸ் குடும்பத்தின் கட்டுமான பணிக்காக உள்ள நிலம் ஒன்று கோரிமேடு பகுதியில் உள்ளது. அது முறையான ஆவணம் பட்டா மற்றும் பத்திரம் அனைத்தும் இவர்கள் பேரில் இருக்கும் நிலையில் நீதிமன்ற வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது.

அந்த நிலத்தில் சிறிய கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளது. இதனை இன்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பிரிவு அதிகாரிகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி 50 மேற்பட்ட காவல்துறையினருடன் சென்று இடித்து இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்று தெரிவித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவிக்கையில்; "கலைஞர் சிலை அமைக்க நாங்கள் எந்த ஒரு முடிவும் இதுவரை தெரிவிக்கவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் அரசு அதிகாரிகள் இதுபோன்று அத்துமீறி அராஜக செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு எங்களை பாதுகாக்க வேண்டும். கலைஞர் சிலை அமைக்க எங்கள் குடும்பத்தார் அதற்கான ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். அதற்குள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் இது போன்ற அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க:சிறையில் உள்ள மகனை ஜாமீனில் எடுக்க முயன்ற மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள் கைது!

ABOUT THE AUTHOR

...view details