தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலாளர் நல திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - ‘Workers protest across the country

சேலம்: மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களின் உரிமைச் சட்டத்தை திருத்தம் செய்ததைக் கண்டித்து சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

protest
protest

By

Published : Nov 26, 2020, 8:17 PM IST

நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களின் உரிமைச் சட்டத்தை திருத்தம் செய்ததைக் கண்டித்து இன்று (நவ. 26) அகில இந்திய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே நீலமலை தோட்டத் தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின்போது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும், மத்திய, மாநில அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும், தமிழ்நாடு அரசு 2016ஆம் ஆண்டுமுதல் முதல் 21 மாத ஊதியமாக நிலுவையை வழங்கிட வேண்டும்,

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதையும் படிங்க:'நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பேரிடர் நிவாரண நிதி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details