தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்வதேச தரத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். - கால் உயர் ஆராய்ச்சி நிலையம்

சேலம்: சர்வதேச தரத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆரய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிகல் நாட்டி தொடங்கிவைத்தார்.

the-chief-minister-laid-the-foundation-stone-for-the-international-animal-husbandry
the-chief-minister-laid-the-foundation-stone-for-the-international-animal-husbandry

By

Published : Feb 10, 2020, 7:53 AM IST

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டு விழா, விவசாய பெருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றினர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, " கால்நடை உயர் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கு ரூ. 564.44 கோடியும், ஆராய்ச்சி நிலையத்தை ஒட்டி உருவாக்கப்பட உள்ள புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்திற்கு ரூ. 196.36 கோடியும், இந்நிலையங்களுக்கு தேவையான குடிநீர் திட்டத்துக்கு ரூ.262.16 கோடி என மொத்தம் 1,022.96 கோடி ஒதுக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.

ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக அமைய உள்ள கால்நடைப் பூங்கா பயன்பாட்டுக்கு வரும்போது, தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக மாறும் வாய்ப்பு உள்ளது. கால்நடை வளர்ப்புக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் இங்கு உருவாக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும்,பாரம்பரிய மாட்டினங்களைப் பாதுகாக்கும் வகையிலான ஆராய்ச்சியும் இங்கு மேற்கொள்ள உள்ளதாகவும், காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம், பர்கூர் ஆகிய தமிழ்நாட்டின் மாடுகள், சிவப்பு சிந்தி, சாகிவால் ஆகிய வெளிமாநில மாட்டினங்கள் என மொத்தம் 200 கறவை மாடுகள் வளர்க்கப்பட்டு பல்வேறுவிதமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என தெரிவித்தார்.

அதேபோல், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் பண்ணை பிரிவில் 800 இன செம்மறி ஆடுகள், 300 சேலம் கருப்பு ஆடுகளை கொண்டு நவீன தொழில்நுட்பங்களுடன் பண்ணை அமைக்கபடவுள்ளது. மேலும் வெண் பன்றி பண்ணையில் ஏழு ஆண், 60 பெண் பன்றிகளை இனப்பெருக்கத்திற்காக வளர்க்ப்பட்டு, ஆண்டுதோறும் சுமார் ஆயிரம் வெண்பன்றி குட்டிகள் விற்பனை செய்யப்படும் எனவும், அதில் அதிநவீன தானியங்கி தீவனம், குடிநீர் அளிப்பான்கள் கொண்டு மாதிரி வெண்பன்றி பிரிவு அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

உள்நாட்டு கோழி இனங்கள் தானியங்கி தீவனம், குடிநீர், முட்டை தரம் பிரிப்பான்கள் உள்ளடங்கிய, 50 ஆயிரம் அசல் நாட்டு கோழிகள் கொண்ட பண்ணை உருவாக்கப்படும் கூடுதலாக கோழிக்குஞ்சு பொரிக்க வசதியும், கோழித் தீவன ஆலையும் அமைக்கப்படும். இப்பிரிவில் இருந்து பெறப்படும் முட்டைகளும், குஞ்சுகளும் அரசு கால்நடை நலத்திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

சர்வதேச தரத்தில் உருவாகும் கால்நடை ஆரய்ச்சி பூங்கா
தமிழ்நாட்டின் நாட்டின நாய் இனங்கள் தாயகமாகக் கொண்ட ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கண்ணி இன நாய்கள் என மொத்தம் 40 எண்ணிக்கையில் வளர்க்கப்படும் நாய்குட்டிகள் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்காக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். மீன்வளர்ப்பு செயல்முறை விளக்கப் பிரிவில் ஆண்டுதோறும் 20 லட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி பண்ணையும் நவீன மீன் விற்பனை மற்றும் மீன் பொருட்கள் உற்பத்தி பிரிவு மீன் வளர்ப்புடன் ஒருங்கிணைந்த காய்கறித் தோட்டம் அமைக்கப்படும்." என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'காவிரி டெல்டா பகுதி, இனி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்' - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details