சேலம் மாவட்டம் மாமாங்கம் பகுதியில் செல்லும் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் ஒரமாக கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததை கண்ட அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
'தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்' - The car caught fire on the Salem national highway
சேலம்: தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
car burning
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சியடித்து எரிந்த காரை அணைத்தனர். மேலும் காருக்குள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து சூரமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னை சில்க்ஸில் பயங்கர தீ விபத்து; ரூ.2 கோடி மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்!