சேலம் மாவட்டம் கருங்கல் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பாமகவைச் சேர்ந்த கணேசன் என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து கணேசன் நேற்று ஊராட்சி மன்ற தலைவராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் அவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் கணேசன் உள்பட அவரின் ஆதரவாளர்கள் ஐந்து பேர் காயமுற்றனர். உள்ளாட்சி தேர்தலில் தோல்வியுற்ற ராஜேந்திரன், பழனிசாமி ஆகியோர் ஆள்வைத்து இத்தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.