தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பதிக்குச் சென்றிருந்தபோது பூட்டிய வீட்டில் கைவரிசை - பத்து சவரன் நகைகள் திருட்டு! - சேலம் தொழிற்பேட்டை வீட்டில் கொள்ளை

சேலம்: சூரமங்கலம் அருகே உள்ள தொழிற்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் பத்து சவரன் நகைகள் மற்றும் 40ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ten-savaran-gold theft

By

Published : Oct 12, 2019, 11:45 PM IST

சேலம் சூரமங்கலம் ஐந்து ரோடு அருகே தொழிற்பேட்டை உள்ளது. இங்கு உள்ள ரெட்டியூர் மெயின் ரோடு அருகே உள்ள பகுதியில் வசித்து வரும் சரோஜா கடந்த எட்டாம் தேதி தனது வீட்டைப் பூட்டி விட்டு திருப்பதிக்குச் சென்றார்.

இன்று காலை வீடு திரும்பிய அவர் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகைகள் மற்றும் ரொக்கப்பணம் ரூபாய் 40ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது. .

நகை திருடப்பட்ட வீடு

இத்திருட்டு குறித்து சரோஜா சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் உதவி காவல் ஆணையர் பூபதிராஜன் தனிப்படை அமைத்து திருடர்களைத் தேடி வருகின்றார்.

இதையும் படிங்க:’கீழடியைப் பார்வையிடும் நாள்களை நீட்டிக்க வேண்டும்’ - பொதுமக்கள்

ABOUT THE AUTHOR

...view details