சேலம் செவ்வாய்பேட்டை அங்காளம்மன் கோயிலுக்குச் சொந்தமாக 5 ஏக்கர் நிலம் பள்ளப்பட்டி, பெரிய ஏரிக்கரை பகுதியில் உள்ளது. இந்த நிலத்தைச் சிலர் ஆக்கிரமிப்பு செய்து, சட்ட விரோதமாக போலி பத்திரங்கள் தயார் செய்து விற்பனை செய்ய முயற்சி மேற்கொண்டனர்.
தகவலறிந்த திருக்கோயில் தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அங்காளம்மன் கோயிலுக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்புக்காரர்களிடம் இருந்து மீட்டு கோயிலுக்கு ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.