சேலத்தை அடுத்த தாதம்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் மாரியம்மன் கோயில் பல ஆண்டுகளாக இயங்கிவருகிறது. அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் கோயிலைச் சுற்றி அமைந்துள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் சிலர் காலியாக இருக்கும் கோயில் இடத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து பயன்படுத்திவந்தனர். இந்த நிலையில் ஆக்கிரமிப்பு குறித்து திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பெயரில் நில அளவு செய்ய உத்தரவிடப்பட்டது.