தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் கடைகள் திறப்பு: 5 கி.மீ., தூரம் வரிசையில் நின்ற குடிமகன்கள்! - சேலத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு: ஆதார் அட்டையுடன் வரிசையில் நின்று குடிமகன்கள்

சேலம்: தமிழ்நாட்டில் மதுகடைகள் திறப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து மது பிரியர்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை காத்திருந்து, மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரிசையில் நின்று குடிமகன்கள்
ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரிசையில் நின்று குடிமகன்கள்

By

Published : May 8, 2020, 12:55 AM IST


ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு 40க்கும் மேற்பட்ட நாள்களாக, தமிழ்நாட்டில் மதுபான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மே7ஆம் தேதி முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபான கடைகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி நேற்று காலை சரியாக பத்து மணிக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 216 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக, தடை செய்யப்பட்டப் பகுதிகளில் உள்ள 48 கடைகளும் திறக்கப்படவில்லை.

மீதமுள்ள 168 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டது. சேலம் டவுன் ரயில் நிலையம் எதிரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். மேலும் மது வாங்கும் நபர்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு, சுத்தப்படுத்திய பிறகே அவர்களுக்கு மதுபாட்டில்கள் வழங்கப்பட்டது.

மதுபானக்கடை திறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே மதுபிரியர்கள் முகக்கவசம் அணிந்து குடைகளை பிடித்த படி நீண்ட வரிசையில் நிற்கத் தொடங்கினர். இதனால் சேலம் டவுன் ரயில் நிலையம் பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையாளர் தங்கதுரை, டவுன் காவல் நிலைய ஆய்வாளர் குமார் ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மது பிரியர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி மதுபாட்டில்கள் வாங்கிச் செல்லுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது. மது பாட்டில்கள் கிடைத்த மகிழ்ச்சியில் மதுபிரியர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details