சேலம் தனியார் கல்லூரி ஒன்றில் புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,”கல்லூரி வாழ்க்கை முற்றிலும் வேறு வகையானது. இங்குதான் கலை, விளையாட்டு என எல்லா திறமைகளையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ளமுடியும். மத்திய அரசு புதியதாக கொண்டுவந்துள்ள கல்வி கொள்கை குறித்தும் முழுமையாக விமர்சிக்க இயலாது. ஏனெனில் நான் கல்வியாளர் இல்லை.
அதே நேரத்தில் மும்மொழி கொள்கையை வரவேற்கிறேன். இந்தி படித்து தான் ஆக வேண்டும் என்று திணிக்கக்கூடாது. அதை ஒரு வாய்ப்பாக தான் தந்துள்ளார்கள். மேலும் இந்தி மொழியை எதிர்த்தது திராவிடத் தலைவர்கள் செய்த தவறு. இந்தியை கற்றுக் கொள்வதில் தவறில்லை.
எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் மேலும் மாநிலளவில் தமிழ் வழியில் கற்ற மாணவர்கள் முதல் இடங்களை பெற்ற நிலையிலும், கல்லூரி பருவத்தில் ஆங்கிலவழி பாடங்களை படிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். எனவே தமிழையும் ஆங்கிலத்தையும் இரு கண்களாக வைத்துப் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் அவ்வாறு செய்தால் மட்டுமே வளமான எதிர்காலத்தைப் பெற முடியும்" என்றார்.
எழுத்தாளர் லேனா தமிழ்வாணன்