சேலம்:சேலம் கிழக்கு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் மூன்றாவது வருடாந்திர கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா இன்று (மார்ச் 23) நடைபெற்றது. இதில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தமிழ்நாடு தலைவரும், தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான முருகன் வெங்கடாஜலம் கலந்துகொண்டார்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முருகன் வெங்கடாஜலம், "தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வரலாறு காணாத அளவிற்கு போக்குவரத்து துறையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
அமைச்சரை மாற்ற வேண்டும்:ஒரு குண்டூசியை நகற்றி வைப்பதற்குக் கூட பல ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வழங்கும் நிலைமைக்கு மோட்டார் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக தேர்தல் காலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின் போக்குவரத்துத்துறை சீரமைக்கப்படும் என்றார். யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.