சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் 19ஆவது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு 55 ஆயிரத்து 784 மாணவ மாணவிகளுக்கு பட்டமளித்தார்.
இவ்விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், "பெரியார் பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டிற்காக ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வி படிக்கும் 18 வயதிலிருந்து 23 வயதுவரை உள்ள மாணவ மாணவியர் எண்ணிக்கையில் இந்தியா 26.3 விழுக்காடு பெற்றுள்ளது. இந்தியாவில் உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவிகளில் 49 விழுக்காட்டினர் தமிழ்நாட்டில் உள்ளனர்" என்றார்.