சேலத்தில் நேற்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்பட்டுவரும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை தற்போதைய மத்திய பாஜக அரசு நிறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
விவசாயிகளின் உயிர் ஆதாரமாக விளங்கும் இலவச மின்சாரத்தை தமிழ்நாட்டில் ரத்துசெய்துவிட்டால் முழுமையாக விவசாயம் அழிந்துபோகும் சூழல் ஏற்படும். எனவே, இதனைத் தடுக்க தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மத்திய அரசு, மின்சாரத் திட்டம் 2020 என்கிற திட்டத்தை உருவாக்கி உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரத்தை ரத்துசெய்யும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.