தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரி நீரைப் பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- முதலமைச்சர் உறுதி

சேலம்: காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் பங்கு நீரைப் பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

tamilnadu chief minister opens new bridges in salem
tamilnadu chief minister opens new bridges in salem

By

Published : Jul 16, 2020, 12:53 AM IST

சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கந்தம்பட்டி பிரிவு சாலையில், ரூ.33 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஜூலை 15) திறந்து வைத்தார்.

மேலும் சேலம் மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூபாய் 54. 93 கோடி மதிப்பீட்டில் 34 புதிய பணிகளுக்கும், பேளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூபாய் 8.38 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கான அடிக்கல்லை முதலமைச்சர் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்," தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மண்டலங்களுக்கு இடையிலான போக்குவரத்து செயல்பட்டால் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் சிரமம் ஏற்படுகிறது. இதன்காரணத்தால், பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நோய்த்தொற்று குறையத் தொடங்கினால் மட்டுமே ஊரடங்கு தளர்வு செய்வது குறித்து அரசு முடிவெடுக்கும். மாநிலத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யமுடியாது.

இதற்கென்று அரசு மருத்துவமனைகளை அமைத்துள்ளது. இந்த மருத்துவமனைகளில், அறிகுறி தென்பட்ட நபர் தொற்றிலிருந்து பூரண குணமடையும் வரை அரசு ஆவண செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் உலக சுகாதார அமைப்பு அளிக்கும் ஆலோசனைகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது. மாநிலத்தில் 75 ஆயிரம் படுக்கைகள் கொண்ட முகாம்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக படுக்கைகள் தயார் செய்யப்படும். தனியார் மருத்துவமனைகளில் நோய்த் தொற்று சிகிச்சையில் முறைகேடு நடப்பதாக தெரிந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும்" என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் வைப்பு தொகை அளவுக்கு ஏற்ப கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. காவிரி ஒழுங்காற்று ஆணையத்தில் தமிழ்நாட்டின் பங்கு நீரை தரும்படி வலியுறுத்தியுள்ளோம். தமிழ்நாட்டின் பங்கு நீரை பெற தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேட்டூர் உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம் தொடர்பாக ஏற்கனவே அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. உபரி நீரை மட்டுமே பயன்படுத்தி ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுத்திருக்கிறோம். பயனில்லாமல் கடலில் கலக்கும் நீரை ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளது." என்றார்.

புதிய மேம்பாலம் திறப்பு விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் , சேலம் மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details