பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அனைத்து அரசு துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மாநில பிரச்சார செயலாளர் சுகமதி தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.