டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவருவதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சிவபெருமாள் கூறுகையில், "மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டம் தனிநபர் உரிமைகளுக்கு எதிரானது.
விவசாயத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்காக அரசை அல்லது நீதிமன்றத்தை விவசாயிகள் நாடக்கூடாது என்று அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை தமிழ்நாடு விவசாயிகள் முழு மனதோடு ஆதரிக்கிறோம்.