தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்று சேலம் வருகிறார் எடப்பாடி பழனிசாமி! - நாளை சேலம் வருகிறார் முதலமைச்சர்

சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப். 15) சேலம் வருகைதருகிறார்.

முதலமைச்சர்
tamil nadu chief minister palanisamy

By

Published : Feb 15, 2021, 6:27 AM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கோயம்புத்தூரில் இன்று (திங்கள்கிழமை) காலை 123 இணையருக்கு இலவச திருமணம் நடைபெறவுள்ளது. இத்திருமணங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் நடத்திவைக்கின்றனர்.

இதன்பின்னர், கார் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் செல்கிறார். அதைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் கலந்துகொண்டு பேசுகிறார்.

பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு கார் மூலம் சேலம் திரும்பும் முதலமைச்சர், நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் இரவு தங்குகிறார்.

நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை சேலத்திலிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்வார் எனக் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:”வருகின்ற தேர்தல் தேச பக்தர்களுக்கும், தேச விரோதிகளுக்கும் இடையேயான தேர்தல்” - எல்.முருகன்

ABOUT THE AUTHOR

...view details