தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்: தவாக தலைவர் வேல்முருகன் ஆவேசம்! - bigboss show in tamilnadu

T Velmurugan MLA: சேலத்தில் நடைபெற்ற கட்சியில் தொண்டர்கள் இணைப்பு விழாவில், தமிழர் பண்பாட்டை சீரழிக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பு செய்துவரும் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியை நிறுத்தும் வரையில் முற்றுகை இடுவோம் என தவாக வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தவாக தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை
தவாக தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2023, 7:26 PM IST

சேலம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணையும் இணைப்பு விழா இன்று(நவ.19) சேலத்தில் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் கூறியதாவது, "தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் தொகுப்பாளராக தொகுத்து வருகிறார். பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருந்தது, தற்போது ஆபாசமாக செல்கிறது.

குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சியில், படுக்கையறை காட்சிகள், முத்த காட்சிகள், நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி, நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பெண்கள் ஆடை சுதந்திரம் என்று அரை குறை ஆடைகளை அணிந்து, அருவருக்கத்தக்க வகையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதை அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மாற்றியமைக்க வேண்டும். இதைத் தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் ஆபாசமாகவும், மோசமான வசனங்களைப் பயன்படுத்தி முகம் சுளிக்க வகையில் சண்டையிட்டுக் கொள்வதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகளவில் பார்வையாளர்களைக் கொண்ட இந்த நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் நிறுத்த வேண்டும்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வரும் கமல்ஹாசனும், ஒளிபரப்பு செய்யும் அந்த தனியார் நிறுவனமும் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் முதற்கட்டமாக மிகப்பெரிய ஜனநாயக போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்தும். அதுலயும் அவர்கள் தீர்த்துக் கொள்ளவில்லை என்றால் கடுமையான விளைவுகளை இந்த நிகழ்ச்சி சந்திக்கும்" என்று எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது ஒப்புதல் அளிக்காத ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆளுநர் ரவி தமிழ்நாட்டின் பேரலல் அரசை நடத்தி வருகிறார்.

ஆர்எஸ்எஸ் ரவி ஒரு நிமிடம் கூட தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்க தகுதி இல்லை. ஒன்றிய அரசு ஐடி, இடி, சிஐடி ஆகியவற்றை மாநில அரசுகளை மிரட்டவே பயன்படுத்துகிறது. இது நாடறிந்த செய்தி. நடிகை குஷ்பூ தேவை இல்லாமல் சமூக வலைதளங்களில் மோசமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். பெண்கள் அமைப்பினர் இவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குஷ்பு போன்ற நடிகை நாவடக்கத்துடன் பேச வேண்டும்" என்று அவரது காட்டமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சோத்துப்பாக்கம் அஞ்சூரம்மன் கோயில் மகாகும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

ABOUT THE AUTHOR

...view details