ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுஜித் நலமோடு மீட்கப்பட வேண்டி தமிழ்நாடு முழுவதும் மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள நேசக்கரங்கள் ஆதரவு ஏற்போர் இல்லத்தில், சுஜித் விரைவில் மீட்கப்பட வேண்டி குழந்தைகள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
நேசக்கரங்கள் இல்லத்தில் பராமரிக்கப்பட்டுவரும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டி பாடல்களைப் பாடினார்கள்.