தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறந்த காவல் நிலையமாக சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் தேர்வு! - suramangalam women police station

சேலம்: சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் தேசிய அளவில் இரண்டாவது சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மாநகர காவல் ஆணையாளர் த.செந்தில்குமார்
மாநகர காவல் ஆணையாளர் த.செந்தில்குமார்

By

Published : Nov 26, 2020, 8:55 AM IST

சேலம் மாவட்டம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை தேசிய அளவில் இரண்டாவது சிறந்த காவல் நிலையமாக மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.

தேசிய அளவில் 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்தற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் தேசிய அளவில் இரண்டாவது காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சேலம் மாநகர காவல் ஆணையாளர் த.செந்தில்குமார்,”மத்திய உள்துறையின் பல்வேறு வித ஆய்வுகளில் நாட்டிலேயே இரண்டாவது சிறந்த மகளிர் காவல் நிலையமாக சேலம் சூரமங்கலம் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்திய அளவில் இரண்டாவது சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யும் அளவிற்கு சிறப்பாகப் பணியாற்றிய சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி, காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ளம்: நோயாளிகள் கடும் அவதி

ABOUT THE AUTHOR

...view details