ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி, சேலத்தில் இன்று (ஆகஸ்ட் 9) ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தளர்வின்றி கடைபிடிக்கப்படுகிறது.
ஞாயிறு முழு ஊரடங்கு: சேலத்தில் வெறிச்சோடிய சாலைகள்!
சேலம்: ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஆகஸ்ட் 9) முழு ஊரடங்கு சேலத்தில் கடைபிடிக்கப்பட்டு வருவதால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறன.
இந்நிலையில், சேலத்தில் உள்ள அனைத்து சாலைகளும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, ஐந்து ரோடு, 4ரோடு, அஸ்தம்பட்டி , அம்மாபேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாநகரை ஒட்டியுள்ள அயோத்தியாபட்டணம், கருப்பூர், நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட நெடுஞ்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளிலும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே சுற்றும் பொதுமக்களை எச்சரிக்கும் காவல் துறையினர் அவர்களை வீட்டிற்கு திரும்பிச் செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.