சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் சென்னையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது மனைவி அனுராதா மகள் ஆர்த்தி மற்றும் ஆஷிகா ஆகியோருடன் நேற்று மாலை அறை எடுத்து தங்கியுள்ளனர்.
கடன் தொல்லையால் விஷம் அருந்தி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சாவு - தற்கொலை
சேலம்: கடன் தொல்லை காரணமாக சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நான்கு பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு விடுதிப் பணியாளர்கள் கதவை திறந்து பார்த்தபோது விஷம் குடித்து மூன்று பேர் உயிரிழந்த நிலையில் இருந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆர்த்தி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் அழகாபுரம் காவல் துறையினர் மூன்று பேரும் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக இந்த தற்கொலை நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது.