சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள பூலாம்பட்டி பகுதியில் சுமார் 100 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தை பொங்கலுக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில் கரும்பு வியாபாரிகள், இன்கு வந்து மொத்தமாக வாங்கிச்செல்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் வியாபாரிகள் யாரும் கரும்பு வாங்க வரவில்லை எனக் கூறப்படுகிறது.
தை பொங்கலுக்கு தமிழ்நாடு அரசு குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசாக கரும்பு, அரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனால், கூட்டுறவு மூலம் அரசு அலுவலர்கள் பொதுமக்களுக்கு கரும்பு கொடுக்க வேண்டும் என்று நேரில் வந்து பார்த்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.