தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீர்மிகு நகரத் திட்டம் குறித்து மாணவர்களின் கருத்து! - ஆணையாளர் சதீஷ்

சேலம்: சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் எளிதான வாழ்க்கை குறித்த கருத்து கணிப்பில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டதாக ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

சீர்மிகு நகரத் திட்டம் குறித்து மாணவர்கள் கருத்து கேட்பு!
சீர்மிகு நகரத் திட்டம் குறித்து மாணவர்கள் கருத்து கேட்பு!

By

Published : Feb 7, 2020, 3:13 PM IST

சேலம் நகர திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சூரமங்கலம் தனியார் பொறியியல் கல்லூரியில் சீர்மிகு நகர திட்டம் குறித்த மாணவ, மாணவியர் பங்குகொண்ட கருத்துக் கணக்கெடுப்பு நிகழ்வை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் இன்று தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க...மீனவர்கள் நிவாரணத் தொகை வழக்கு - பல்வேறு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் " சீர்மிகு நகரங்களில் வசிக்க கூடிய பொது மக்களின் வாழ்க்கை திறன், சமூக மேம்பாடு, கல்வி தரம், சுகாதார மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பில் எனது நகரம் எனது பெருமை என்ற தலைப்பில் எளிதான வாழ்க்கை குறித்த கருத்து கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் 4,865 கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்” எனக் கூறினார்.

சீர்மிகு நகரத் திட்டம் குறித்து மாணவர்கள் கருத்து கேட்பு!

இந்த கருத்து கணக்கெடுப்பு நிகழ்வில் சேலம் மாநகராட்சி நல அலுவலர் மருத்துவர் பார்த்திபன், சோனா கல்லூரி மற்றும் தியாகராஜா தொழில்நுட்பக் கல்லூரியில் முதல்வர் செந்தில்குமார் , மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details