தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவர்கள் இணைந்து வழங்கிய அறிவியல் சோதனை இணையவழிப் பயிற்சி!

சேலம்: அரசு ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனம், தாரமங்கலம் ஒன்றியம் கரட்டுப்பட்டி பள்ளி மாணவர்கள் இணைந்து அறிவியல் சோதனை இணையவழிப் பயிற்சியை வழங்கினர்.

student scientific experiments in salem
student scientific experiments in salem

By

Published : Mar 3, 2021, 8:40 PM IST

கரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் தற்போது சிறிதளவு செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மாணவர்கள் கல்வி செயல்பாடுகள் மாணவர்கள் மூலமாகவே தொடங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தாரமங்கலம் ஒன்றியம் கரட்டுப்பட்டி பள்ளி மாணவர்கள் மூலமாக ”OFFSPRING DIGGINGS WORKOUT DURING COVID 19” என்ற இணையவழி அறிவியல் சோதனைகளை மாணவர்கள் செயல்பாடாக வழங்கினர்.

இதன்மூலம் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் பள்ளிகளுக்கு உணவுப்பொருள்கள் வாங்க வந்த மாணவர்கள் ஆசிரியர்களுடன் சிறிது நேரமே கிடைத்திருந்த நிலையில் அதைப் பயன்படுத்தி இந்த அறிவியல் சோதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.

அறிவியல் சோதனை இணையவழிப் பயிற்சி

இது மாணவர்களுக்கு மட்டும் பயனளிக்கும் வகையில் அமைவது மட்டுமல்லாமல் மேலும் பல கிராமப்புற மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைத்திருக்கிறது.

இந்நிகழ்வை சேலம் மாவட்ட அரசு ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனம், தாரமங்கலம் ஒன்றியம் கரட்டுப்பட்டி அரசுப்பள்ளி தலைமையாசிரியர் சரவணன், பள்ளி மாணவர்கள் இணைந்து வழங்கினர். இந்நிகழ்வை முதல்வர் முனைவர் செல்வம் தலைமை தாங்கினார், கல்வியாளர் முனைவர் விஜயலக்ஷ்மி ஒருங்கிணைத்தார்.

இதையும் படிங்க: நடத்தை விதிகளை மீறியதாக திமுக நிர்வாகிகள் மீது வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details