தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு - Student dies of dengue fever in Salem

சேலம்: ஆத்தூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவி உயிரிழப்பு
டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவி உயிரிழப்பு

By

Published : Nov 27, 2019, 9:41 AM IST

சேலம் மாவட்டம் ஆத்தூர் சக்தி நகர் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரின் மகள் ஷோபனா தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் திடீரென ஐந்து நாட்களுக்கு முன்பு ஷோபனா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவிக்கு டெங்கு பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து சிறுமியை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவி உயிரிழப்பு

அங்கு மாணவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: திமுக மருத்துவரணி சார்பில் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் முகாம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details