சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஏழுமாத்தனூர், ஜெயம் கார்னர் பகுதிக்கு கஞ்சமலை அடிவாரத்தில் இருந்து வரும் நீரோடையை தனிநபர்கள் ரியஸ்எஸ்டேட் தொழிலுக்காக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ஏரி, குளம், குட்டைகளுக்கு நீர் செல்ல வழியில்லாமல் உள்ளது.
நீரோடையை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு - பொதுமக்கள் குற்றச்சாட்டு - நீரோடையை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு
சேலம்: இளம்பிள்ளை அருகே நீரோடையை ரியல்எஸ்டேட் தொழிலுக்காக தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் ," இடங்கணசாலை இப்பகுதியில் உள்ள காடையாம்பட்டி ஏரிக்கு வரும் நீரோடைகள் பல இடங்களில் தனிநபர்களின் நலனுக்காக ஆக்கிரமித்து அடைப்பு ஏற்படுத்தி விட்டதால் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து பல முறை வருவாய்த்துறை அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் இடங்கணசாலை பேரூராட்சி நிர்வாகமும், வருவாய்த்துறை நிர்வாகமும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.