திராவிடர் கழகத்தின் பவள விழா சேலத்தில் நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க சேலம் வந்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
சிலை அவமதிப்பு சம்பவங்களுக்கு அரசு துணை போகிறது - கி.வீரமணி
சேலம்: தமிழ்நாட்டில் பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகளை அவமதிப்பு செய்பவர்களுக்கு மாநில அரசு துணை போகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகளை அவமதிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. பெரியாரும் அம்பேத்கரும் தமிழ்நாட்டில் வெறும் சிலைகளாக மட்டும் வைக்கப்படவில்லை. இருவரும் ஆழமான அசைக்க முடியாத கொள்கைகள், வலுவான தத்துவங்கள் மூலம் பதிந்துள்ளனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் அவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் சிலர் அவமதிக்கும் வகையில் இது போன்ற கீழ்தரமான செயல்களை செய்கிறார்கள்.
சிலை அவமதிப்பு செய்பவர்களுக்கு இந்த சம்பவங்கள் மேலும் ஆதரவான குரல்கள் வலுசேர்க்கும் வகையில் வெடித்துக் கிளம்பும் என்பதை அறியாதவர்கள். இவர்கள் நெருப்போடு விளையாடக் கூடாது என்று எச்சரிக்கிறோம். இது போன்ற சம்பவங்களை செய்யும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை அடக்காமல், தமிழ்நாடு அரசும் தெரிந்தோ தெரியாமலோ துணை போவதுதான் அவமதிப்பு சம்பவங்கள் நடைபெற காரணம்" என்று தெரிவித்தார்.