சிவனுக்கு உகந்த மிகச்சிறப்பான பண்டிகையாக மகாசிவராத்திரி பண்டிகை இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிவனை நினைத்து விரதம் இருப்பவர்களுக்கு உரிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் சேலம் ஐந்துசாலை அருகே இயங்கி வரும் பிரபல நட்சத்திர விடுதியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 40 கிலோ சாக்லேட் கொண்டு ஆதியோகியின் திருவுருவ சிலையை தத்ரூபமாக வடிவமைத்து அசத்தியுள்ளனர். 4 சமையல் கலை வல்லுனர்கள் சுமார் 40 மணி நேரத்தில் இந்த ஆதியோகியின் திருவுருவத்தை தத்துரூபமாக வடிவமைத்துள்ளனர். தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பார்வைக்காக விடுதி நுழைவாயிலில் இந்த சிலை மூன்று நாள்கள் வைக்கப்பட்டுள்ளது.
மகாசிவராத்திரியை முன்னிட்டு 40 கிலோ சாக்லேட்டில் ஆதியோகியின் சிலை! - சேலம் நட்சத்திர விடுதி
சேலம் : மகாசிவராத்திரியை முன்னிட்டு சேலத்தில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் 40 கிலோ சாக்லேட் கொண்டு உருவாக்கப்பட்ட ஆதியோகியின் சிலை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மகாசிவராத்திரியை முன்னிட்டு 40 கிலோ சாக்லேட்டில் ஆதியோகியின் சிலை!
இதனை விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிடுவதோடு குடும்பத்துடன் செல்பி எடுத்து செல்கின்றனர்.
இதையும் படிங்க : பெரம்பலூரில் கழிவு நீரால் நிலத்தடி நீர் மாசுபாடு