தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யோகா சாம்பியன்ஷிப் 2019; மாணவ, மாணவிகள் ஆர்வம்! - கல்லூரி மாணவ, மாணவிகள்

சேலம்: மாநில அளவிலான யோகா போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

salem yoga competition

By

Published : Aug 26, 2019, 10:35 AM IST

சேலம் மாவட்ட ஃப்ரீ ஸ்டைல் யோகா சங்கம் மற்றும் தமிழன் ஃப்ரீஸ்டைல் யோகா அமைப்பு சார்பில் சேலத்தில் ஸ்டேட் ஃப்ரீஸ்டைல் யோகா சாம்பியன்ஷிப் 2019க்கான மாநில அளவிலான யோகா போட்டி இன்று நடைபெற்றது.

இதில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை திறன்பட வெளிப்படுத்தினர். தொடர்ந்து இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், கேடயமும் வழங்கப்பட்டது.

யோகா சாம்பியன்ஷிப் 2019 - சேலம்

இதைத்தொடர்ந்து இந்தப் போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் அடுத்து நடைபெற உள்ள தேசிய அளவிலான யோகா போட்டியில் கலந்து கொள்ளவுள்ளதாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details