சேலம் டவுன் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில், 11 வயது முதல் 18 வயது வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ - மாணவியர்கள் நான்கு பிரிவுகளின் கீழ் நடந்த இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டனர். போட்டியானது நின்று எறிதல் நிலை, மண்டியிட்டு எறிதல் நிலை, உட்கார்ந்து எறிதல் ஆகிய 3 நிலைகளில் நடைபெற்றது.