தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநில அளவில் சாதித்த வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா! - salem players won the championship

சேலம்: மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் 18 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த சேலம் அணியினருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

State Level Achievement Commendation Ceremony

By

Published : Oct 7, 2019, 9:00 AM IST

சேலம் மாவட்ட அமெச்சூர் பளுதூக்கும் சங்கத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான தமிழ்நாடு ஜூனியர் பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டனர்.

இதில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 300-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்குபெற்றனர். இந்தப் போட்டியில் சேலம் மாவட்டத்திலிருந்து மட்டும் 20-க்கு மேற்பட்ட ஆண், பெண் அணியினர் கலந்துகொண்டனர்.

இந்தப் போட்டியில் சேலம் அணியைச் சேர்ந்தவர்கள் தங்கம், வெண்கலப் பதக்கம் என 20-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று குவித்திருந்தனர்.

பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா

மாநில அளவில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு இன்று சேலம் மாவட்ட அமெச்சூர் சஙக்த்தின் சார்பாக இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: கவர்ச்சி ஏஞ்சல் ’பாயல் ராஜ்புட்டின்’ லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

ABOUT THE AUTHOR

...view details