சேலம் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பணியாளர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு மாநகராட்சி சார்பில் மண்டலம் வாரியாக அவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில் ஒரு பகுதியாக சேலம் காவேரி மருத்துவமனை நிர்வாகத்திடம் தொடர்புகொண்டு மாநகராட்சி பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமை மாநகராட்சி ஆணையர் சதீஷ் தொடங்கிவைத்தார்.