தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி - குஜராத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் - வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

தூத்துக்குடியி - குஜராத் ஓகா இடையே வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தென்னக ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

TrainTrain
TrainTrain

By

Published : Mar 30, 2021, 12:15 AM IST

தூத்துக்குடியிலிருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள ஓகா நகருக்கு வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் (ரயில் எண்: 09568) ஓகாவிலிருந்து வெள்ளிக்கிழமைகளில் நள்ளிரவு 12.55 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 4.45 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் (ரயில் எண்: 09567) தூத்துக்குடியிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 3.35 மணிக்கு ஓகா சென்று சேரும்.

இந்த ரயில்கள் துவாரகா, ஜாம்நகர், ஹாபா, ராஜ்கோட், அகமதாபாத், வடோதரா, சூரத், புனே, அனந்தபூர், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

ABOUT THE AUTHOR

...view details