கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர துரிதகதியில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை நாடு முழுவதும் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நேரத்தில் அரசுக்கும் பொதுமக்களுக்கும் உதவும் வகையில், சேலம் ஜங்சன் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியான சோனா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், தானியங்கி சானிடைசர் கருவிகளை தயாரித்து கவனம் ஈர்த்துள்ளனர்.
தானியங்கி சானிடைசர் சுரங்கப்பாதை தற்போதைய சூழலில் பெரும்பாலான இடங்களில் கைகளால் சானிடைசர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வைரஸ் தொற்று பரவும் வாய்ப்புகளே அதிகம் உள்ள நிலையில், பரவலைக் கட்டுப்படுத்தும் விதத்தில் கால்களால் இயக்கப்படும் சானிடைசர் தெளிப்பான்கள் இந்தக் கல்லூரி மாணவர்களின் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் அதிநவீன சென்சார் தானியங்கி சானிடைசர் சுரங்கப்பாதையை, கல்லூரியின் மின்னணு தொடர்பியல் துறை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த சுரங்கப் பாதையை பொதுமக்கள் 8 வினாடிகளில் கடக்கின்றபோது சானிடைசர் அவர்களின் உடல் முழுவதும் தெளிக்க்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் இந்த கண்டுபிடிப்புகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உபயோகப்படுத்தப்பட உள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். குறைந்த பொருட்செலவில் மாணவர்கள் இந்த சானிடைசர் தெளிப்பான்களை உருவாக்கியுள்ளது அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:ஊரடங்கை மீறி நடைபயிற்சி... அபராதம் விதித்த அலுவலர்கள்